/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுடுகாட்டுக்கு பாதையின்றி தவிப்பு
/
சுடுகாட்டுக்கு பாதையின்றி தவிப்பு
ADDED : நவ 21, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கோவிந்தமங்கலம் கிராமத்தில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறனர். இப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் இறந்தவர்களை வயல்வெளிகளில் கொண்டு செல்கின்றனர். தற்போது நெல் விவசாயம் செய்துள்ள நிலையில் வயல்கள் வழியாக இறந்தவர்களை துாக்கிச் செல்ல சிரமப்படம் நிலை உள்ளது.
அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுடுகாட்டுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

