ADDED : ஏப் 06, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசுவாமி கோயில் ராமநவமி விழாவில் கருட வாகனத்தில் ராமர் வலம் வந்தார்.
ராம நவமி விழா மார்ச் 28 துவங்கி நடக்கிறது. நேற்று மாலை புத்திர காமேஷ்டி யாகம் பாயாச கட்டளை விழா நடந்தது. அப்போது குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்தவர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பாயாசம் பிரசாதமாக பெற்றனர்.
இன்று ராமஜனனம் எனப்படும் ராமநவமி விழா நடக்கிறது.
நாளை காலை சீதாராமர் திருக்கல்யாணம் நடக்க உள்ளது.