ADDED : அக் 29, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே செங்கல் ஏற்றிக் கொண்டு கூகுடி சென்ற லாரி கூகுடி விலக்கு ரோட்டில் பாலம் அருகே ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. டிரைவர் காரைக்குடி முத்துராக்கு, தொழிலாளர் இளையராஜா காயமடைந்தனர். மேலும் 4 தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்பகுதியினர் கூறுகையில், ரோடு மோசமாக உள்ளது. ஏழு கண்மாய்களின் உபரி நீர் விபத்து நடந்த பாலத்தின் வழியாக செல்கிறது. சாலை, பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

