/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கரிமூட்டம் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு! விலை கிடைத்தும் உற்பத்தி குறைவு
/
கரிமூட்டம் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு! விலை கிடைத்தும் உற்பத்தி குறைவு
கரிமூட்டம் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு! விலை கிடைத்தும் உற்பத்தி குறைவு
கரிமூட்டம் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு! விலை கிடைத்தும் உற்பத்தி குறைவு
ADDED : ஆக 30, 2024 10:05 PM

ராமநாதபுரம் : மாவட்டத்தில் கரிமூட்டம் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். தற்போது மூடைக்கு (10 கிலோ) ரூ.1300 வரை விலை கிடைத்தும் குளிர்ந்த காற்று, ஈரப்பதம் காரணமாக கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அதிகம்காணப்படும் ராமநாதபுரம், திருப்புல்லாணி, கமுதி,உத்தரகோசமங்கை, களரி, புல்லங்குடி உட்பட பல இடங்களில்கரிமூட்டம் தொழில் நடக்கிறது.
இதற்காக அப்பகுதிகளில்உள்ள பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம் போக்கு நிலங்களில்வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை குத்தகைக்குஎடுக்கின்றனர். வேர்ப்பகுதி, மரத்துண்டு என பிரிக்கின்றனர்.தனியாகவும் கரிமூட்டம் போடுகின்றனர்.
குறிப்பிட்டநாட்களுக்கு பின் பிரித்தெடுக்கப்படும் கரி விற்பனைக்காகதரம்பிரித்து சாக்கு மூடைகளில் அடைக்கின்றனர். இங்குகொள்முதல் செய்யப்படும் கரி கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும்விற்பனைக்கு அனுப்புகின்றனர்.மரக்கரிகள் பெரும்பாலும்பேக்கரி, சிறு தொழிற்சாலைகள், ஓட்டல்கள், டீ ஸ்டால்களில்பயன்படுத்தப்படுகிறது.
ராமநாதபுரம் புல்லங்குடி கரிமூட்டதொழிலாளி முத்துராஜ்: பொதுவாக ஐப்பசி,கார்த்திகை மழைக்காலத்தில் கரி உற்பத்தி குறைந்து விடும். இவ்வாண்டு ஆவணியில் அவ்வப்போது மழை, குளிர்ந்த காற்றால் ஈரப்பதம் காரணமாக கரி உற்பத்திபாதிக்கப்படுகிறது. விறகு டன் ரூ.3700க்கு வாங்கி கரிமூட்டம்போடுகிறோம். வேர்பகுதி கரிமூடை(10 கிலோ) ரூ.1350,கம்புக்கரி மூடை ரூ.1200க்கு விற்பனையாகிறது.அதிக விலைகிடைத்தும் உற்பத்தி குறைவால் எதிர்பார்த்த வருமானம் இல்லை என்றார்.