/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவகிரகத்தில் தொலைந்த அலைபேசி ஒப்படைப்பு
/
நவகிரகத்தில் தொலைந்த அலைபேசி ஒப்படைப்பு
ADDED : மே 18, 2025 10:11 PM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர் தவறவிட்ட அலைபேசியை அறநிலையத்துறை ஊழியர்கள் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
மதுரை பகுதியைச் சேர்ந்த முருகன் 55, தனது குடும்பத்துடன் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நேற்று முன்தினம் தரிசனம் செய்துள்ளார்.
இந்த நிலையில் முருகன் தனது அலைபேசியை நவபாஷாண நவக்கிரக பகுதியில் தவற விட்டுள்ளார்.தொடர்ந்து அங்கிருந்து குடும்பத்துடன் முருகன் ராமேஸ்வரம் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அலைபேசி காணாமல் போனது குறித்து தேவிபட்டினம் நவபாஷாண நவகிரக ஊழியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்த நவபாஷாண நவக்கிரக எழுத்தர் தங்கவேல் பாண்டியன் அலைபேசியை கண்டறிந்து பக்தர் முருகனிடம் ஒப்படைத்தார். பக்தரின் குடும்பத்தினர் நவபாஷாண ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.