/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கர தீர்த்தத்தில் தேளி மீன்கள்
/
சக்கர தீர்த்தத்தில் தேளி மீன்கள்
ADDED : ஜன 11, 2025 06:43 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி சக்கரதீர்த்த தெப்பக்குளம் மழை நீர் சேகரிப்பால் நிறைந்து காணப்படும் நிலையில் அதில் ஆபத்தான தேளி மீன்கள் அதிகரித்துள்ளன.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்த தெப்பக்குளம் 5 ஏக்கரில் உள்ளது. கடந்த நவ., டிச., மாதங்களில் பெய்த மழையால் தண்ணீர் முழுமையாக சேமிக்கப்பட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் விடப்பட்டு தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியன் வகையைச் சேர்ந்த தேளி மீன்கள் ஏராளமாக தெப்பக்குளத்தில் பெருகியுள்ளன. முன்பு தெப்பக்குளங்களில் ஜிலேபி கெண்டை, கெளுத்தி, அயிரை, குரவை உள்ளிட்ட நாட்டு ரக மீன்கள் இருந்த காலம் சற்று மலையேறி போய் அதிகளவு தேளி மீன்கள் பெருக்கெடுத்துள்ளன. இவை நாட்டு ரக மீன்களை இரையாக உட்கொண்டு துவம்சம் செய்கின்றன.
தெப்பக்குளத்தில் குளிக்க கூடிய ஐயப்ப பக்தர்கள் அச்சத்துடன் குளிக்கின்றனர். 3 கிலோ முதல் 8 கிலோ எடையுள்ள தேளி மீன்கள் அதிகளவு பெருகி வருவது நாட்டு ரக மீன்களுக்கு ஆபத்தாக உள்ளது.

