தரம் குறைந்த விலையில்லா சைக்கிள்: மாணவர்கள் அவதி
தரம் குறைந்த விலையில்லா சைக்கிள்: மாணவர்கள் அவதி
ADDED : மே 10, 2026 03:06 AM

கடலாடி: கடலாடி, திருப்புல்லாணி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மேல்நிலைப் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா சைக்கிள் தரம் குறைந்ததால் மாணவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் கடந்த பிப்., மாதம் ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
இவற்றில் சைக்கிளின் தரம் மிக குறைவாக இருந்ததால் அதில் பயணிப்பது சிரமமாக இருக்கிறது என்றும் விரைவிலேயே துருப்பிடித்து விடுகிறது என்றும் மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.
அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக தரம் குறைவான இரும்பை பயன்படுத்தி சைக்கிள்களை வழங்கியுள்ளனர்.
இதனால் அவற்றை வீட்டில் வைத்துவிட்டு சைக்கிள் கடைகளில் புதியதாக சைக்கிள் வாங்குகின்றனர்.
கோடை விடுமுறையில் அரசு வழங்கிய சைக்கிளை பயன்படுத்த முடியவில்லை என மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
