/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் குறைவழுத்த மின்சாரம்: 'டிவி', பேன் பழுது
/
ராமேஸ்வரத்தில் குறைவழுத்த மின்சாரம்: 'டிவி', பேன் பழுது
ராமேஸ்வரத்தில் குறைவழுத்த மின்சாரம்: 'டிவி', பேன் பழுது
ராமேஸ்வரத்தில் குறைவழுத்த மின்சாரம்: 'டிவி', பேன் பழுது
ADDED : ஏப் 16, 2025 10:31 PM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் குறைவழுத்த மின்சாரத்தால் வீடுகளில் மின்சாதன பொருள்கள் பழுதாகியும், இயக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் கோயில், தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் இங்கு 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்களும், 50க்கும் மேற்பட்ட படகு இன்ஜின் பழுது நீக்கும் லேத், பட்டறைகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் தங்கும் விடுதியில் ஏ.சி., பேன்கள் தொடர்ந்து இயங்குகிறது.
இதனால் ராமேஸ்வரம் பகுதியில் அதிகழுத்த மின்சாரம் தேவைப்படும் நிலையில் தற்போது குறைவழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் தம்பியான் கொள்ளை, பாரதி நகர், ஜல்லிமலை, சிவகாமி நகர் ஆகிய பகுதியில் குறைவழுத்த மின்சாரத்தால் ஏ.சி., பேன், குளிர்சாதன பெட்டிகள் இயக்க முடியாமலும், பல வீடுகளில் மின்சாதன பொருள்கள் பழுதாகியுள்ளது.
இதனை சரி செய்ய மக்கள் பலமுறை வலியுறுத்தியும் மின்வாரியம் கண்டு கொள்ளவில்லை. வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில், குறைவழுத்த மின்சாரத்தால் பல வீடுகளில் மின் சாதன பொருள்கள் பழுதாகி பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீரான மின்சாரம் வழங்காத மின் வாரியத்தை கண்டித்து தெருக்களில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.