/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள்
/
தாழ்வாக செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள்
ADDED : ஜூலை 24, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே கலங்காப்புளியில் நுாறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள சர்ச் தெருவில் உயரழுத்த மின்கம்பிகள் கைக்கு எட்டும் நிலையில், பல மாதங்களாக தாழ்வாக தொங்குவதால் வழிபாட்டுக்கு சர்ச் செல்பவர்களும், குடியிருப்பு வாசிகளும் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின் வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே துறை அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.