/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செப்.7 ல் சந்திர கிரகணம் ராமநாதபுரத்தில் ஏற்பாடு
/
செப்.7 ல் சந்திர கிரகணம் ராமநாதபுரத்தில் ஏற்பாடு
ADDED : செப் 04, 2025 11:36 PM
ராமநாதபுரம்:நாளை மறுநாள் (செப்.,7) சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால் இந்த அரிய நிகழ்வை பார்க்க ராமநாதபுரம் இன்பன்ட்ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ராமநாட் அஸ்ட்ரோ கிளப் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர். கிளப் மாவட்ட செயலாளர் சொக்கநாதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது இயற்கையான நிகழ்வாகும்.
இதனை நாம் அனைவரும் வெற்று கண்களால் பார்க்கலாம். இந்த அரிய நிகழ்வு செப்., 7 ல் இரவு 8:58 முதல் தோன்ற உள்ளது. இரவு 11:01 முதல் மறுநாள் அதிகாலை 12:33 மணி வரை சந்திரன் முழுமையாக மறைய உள்ளது.
நம் வளிமண்டலத்தில் இருந்து சூரிய ஒளி விலகுவதால் சந்திரன் முழுமையாக மறைவதற்கு பதில் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். நம் கண்களாலோ அல்லது தொலைநோக்கி, பைனாகுலர் வழியாக சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். அடுத்த சந்திர கிரகணம் டிச.,31 2028 அன்று தான் பார்க்க முடியும்.
இந்திய வானியற்பியல் நிறுவனம், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி போன்ற அறிவியல் இயக்கம் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறது.
இதன்படி ராமநாதபுரம் இன்பன்ட்ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சந்திர கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.