/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுரோட்டில் கட்டிலில் படுத்து மாற்றுத்திறனாளி போராட்டம்
/
நடுரோட்டில் கட்டிலில் படுத்து மாற்றுத்திறனாளி போராட்டம்
நடுரோட்டில் கட்டிலில் படுத்து மாற்றுத்திறனாளி போராட்டம்
நடுரோட்டில் கட்டிலில் படுத்து மாற்றுத்திறனாளி போராட்டம்
ADDED : நவ 09, 2024 04:43 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சி சின்ன அஞ்சுகோட்டையில் 50 குடியிருப்புகள் உள்ளன.
குடியிருப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளி கார்த்திக் 35, நேற்று காலை 9:45 மணிக்கு திருவாடானை-மங்களக்குடி ரோட்டில் கட்டிலில் படுத்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், போலீசார் சமரசம் செய்தனர். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
கார்த்திக் கூறியதாவது: பி.இ., படித்துள்ளேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பனை மரம் ஏறிய போது தவறி விழுந்து கால் ஊனமானது. சின்ன அஞ்சுகோட்டையில் 40 ஆண்டுகளாக இக்குடியிருப்பிற்கு ரோடு வசதி இல்லை. வயல் வரப்பு வழியாக நடந்து செல்கிறோம்.
குடிநீர் வசதியும் இல்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே தான் வேறு வழியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார்.