/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
/
மதுரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஜன 22, 2025 06:26 AM
கீழக்கரை : கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் மதுரை மண்டல அளவிலான ஹாக்கி மற்றும் பேட்மிட்டன் போட்டிகள் நேற்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது.
இப்போட்டியில் மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. பேட்மிட்டன் போட்டியில் அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தையும், முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடம் பிடித்தது.
ஹாக்கியில் விருதுநகர் வி.எஸ்.வி.என். பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தையும், மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களை முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா மற்றும் முதல்வர் சேக் தாவூது, துணை முதல்வர் கணேஷ் குமார்.
மாவட்ட ஹாக்கி கழகச் செயலர் கிழவன் சேதுபதி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், செஞ்சிலுவை சங்க செயலாளர் ரமேஷ், உடற் கல்வி இயக்குனர்கள் மருதாச்சலமூர்த்தி செந்தில் முருகன் ஆகியோர் பாராட்டினர்.