/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் கிருஷ்ணர் தீர்த்தத்தில் மகா பூஜை
/
ராமேஸ்வரத்தில் கிருஷ்ணர் தீர்த்தத்தில் மகா பூஜை
ADDED : ஆக 17, 2025 11:03 PM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் கிருஷ்ணர் தீர்த்த குளத்தில் மகா தீபாராதனை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
கம்சனை வதம் செய்த ஸ்ரீ கிருஷ்ணர், 'மாமன் உறவு கொண்ட கம்சனை வதம் செய்தது பாவச் செயல் என ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.
பின் தேவர்கள் தோன்றி, தர்மத்திற்காக நீ செய்தது கொலை ஆகாது, ஆகவே புனித தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி பாபவிமோசனம் செய்து கொள் என ஆலோசனை வழங்கினார்கள். இதனையடுத்து ராமேஸ்வரம் வந்த ஸ்ரீ கிருஷ்ணர், தீர்த்தம் உருவாக்கி புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்படி இத்தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினால், உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள், குடும்ப பிரச்னைகள் விலகி சமாதானம் ஏற்படும்.
பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். ராமேஸ்வரம் அருகே சம்பை கிராமத்தில் உள்ள இத்தீர்த்தம் ' கிருஷ்ணர் தீர்த்தம் 'என்றழைக்கப்படுகிறது. நேற்று தீர்த்த குளத்தில் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதியம்மா தலைமையில் மகா தீபாராதனை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.