/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் அமைத்த குறுங்காடுகளை பராமரிப்பது.. அவசியம்: கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் மரக்கன்றுகள்
/
ஊராட்சிகளில் அமைத்த குறுங்காடுகளை பராமரிப்பது.. அவசியம்: கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் மரக்கன்றுகள்
ஊராட்சிகளில் அமைத்த குறுங்காடுகளை பராமரிப்பது.. அவசியம்: கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் மரக்கன்றுகள்
ஊராட்சிகளில் அமைத்த குறுங்காடுகளை பராமரிப்பது.. அவசியம்: கொளுத்தும் கோடை வெயிலால் கருகும் மரக்கன்றுகள்
ADDED : ஜூன் 26, 2025 12:58 AM
திருப்புல்லாணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி மற்றும் கடலாடி ஒன்றியங்கள் உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் முறையாக பராமரிப்பின்றி குறுங்காடுகள் வெயிலின் தாக்கத்தால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பராமரிக்க வேண்டியது அவசிமாகிறது.
கடந்த 2020 மற்றும் 2021ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கிராமங்களில் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அவற்றில் மியாவாக்கி காடுகள் எனப்படும் குறுங்காடுகள் அமைக்கப்பட்டன.
இத்தகைய அடர் வனப்பகுதியை உருவாக்குவதில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் கிராம மக்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இந்நிலையில் 2025 ஜன.,5 க்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் பெருவாரியான குறுங்காடுகள் பராமரிப்பின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் கூறியதாவது:
பல்வேறு வகையான மரக்கன்றுகளை ஒரே இடத்தில் நெருக்கமாக நட்டு வைத்து அவை வளரும் போது அடர் வனமாகவும் மேகங்களை ஈர்க்கக்கூடிய பசுமையானமாகவும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டது குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம்.
இதுபோன்ற அடர் மரங்கள் உள்ள சோலையில் பறவைகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகை ஏற்படும். இத்திட்டத்திற்கு பெருமளவு ஊக்கமாக இருந்து வளர்த்தெடுத்தவர்கள் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர்.
இந்நிலையில் பெருவாரியான ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாததால் குறுங்காடுகளில் தண்ணீர் பிரச்னை நிலவும் இடங்களில் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வழி இல்லாததால் இதற்கென ஒதுக்கப்பட்ட அரசு நிதி பெருமளவு வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட குறுங்காடுகள் திட்டம் தற்போது நல்ல பலன் தந்து வரும் நிலையில் வறட்சியின் தாக்கத்தால் பராமரிப்பின்றி கருகி வருகிறது. எனவே நீர் நிலைகளில் இருந்து வறட்சி தாக்குதலுக்குள்ளான மரங்கள் மற்றும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து செய்தால் இத்திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றதாக கருதப்படும் என்றனர்.
--