/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாத இலவச கழிப்பறை
/
பஸ் ஸ்டாண்டில் பராமரிப்பு இல்லாத இலவச கழிப்பறை
ADDED : ஆக 04, 2025 03:57 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இலவச கழிப்பறை பராமரிப்பின்றி வீணாகியுள்ளது.
பரமக்குடி நகரில் ராமநாதபுரம் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் வளாகம் செயல்படுகிறது. தினமும் நுாறுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல் கின்றன. பரமக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொரு நாளும் வந்து செல்கின்றனர்.
2015ம் ஆண்டு நகராட்சி பொது நிதி 2 லட்சம் ரூபாயில் ஆண் மற்றும் பெண்களுக்கு இலவச கழிப்பறை கட்டப்பட்டது. இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறையும் இருக்கிறது. கழிப்பறை வளாகம் பராமரிக்கப்படாமல் தளங்கள், மங்குகள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் வீணாகி துர்நாற்றம் வீசுகிறது.
எனவே மக்களின் சுகாதாரம் கருதி நகராட்சி சுகாதாரத்துறை வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.