/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் இரட்டை மாட்டு வண்டியில் மாகாளி உற்ஸவம்; நடனமாடிய பெண் வேடமிட்ட ஆண்கள்

ADDED : ஏப் 07, 2025 05:58 AM

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் மாகாளி உற்ஸவத்தில் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் பெண் வேடமிட்ட ஆண்கள் நடனமாடி சென்றனர்.
பரமக்குடி வன்னிய குல சத்திரிய மண்டகப்படியில் ஒவ்வொரு ஆண்டும் வண்டி மாகாளி உற்ஸவம் நடக்கிறது.
நேற்று மாலை 5:30 மணிக்கு காளி வேடமிட்டவர் இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் மேல் தளத்தில் வில் ஏந்தியபடி அமர்ந்தார்.
தொடர்ந்து அவருக்கு கீழாக மாட்டு வண்டியை சுற்றிலும் பெண் வேடமிட்ட ஆண்கள் நின்றபடி நடனமாடிச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் முத்தாலம்மன் கோயிலை சுற்றி மீண்டும் சின்ன கடை வீதியை அடைந்தது.
அங்கு இரவு 8:00 மணிக்கு மாகாளி வேடமணிந்தவர் வண்டியில் இருந்து இறங்கி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சிறுவர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என குறவன், குறத்தி, புலி வேடமிட்டும் ஆடி மகிழ்ந்தனர்.
நகர் முழுவதும் சுற்றி வந்த மாட்டு வண்டி மாகாளி உற்ஸவத்தை பல ஆயிரம் பக்தர்கள், பொதுமக்கள் தரிசித்தனர்.
விழாவில் மகாசபையின் தலைவர் மனோகரன், செயலாளர் மணவாளன், பொருளாளர் பார்த்திபன் உட்பட நிர்வாகஸ்தகர்கள் கலந்து கொண்டனர்.