/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் மகரஜோதி தரிசனம்
/
ரெகுநாதபுரத்தில் மகரஜோதி தரிசனம்
ADDED : ஜன 15, 2024 11:21 PM
ரெகுநாதபுரம், : ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் நடந்தது. நேற்று காலை மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. சபரிமலை பெருவழி பயணம் சென்று விட்டு திரும்பிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மகரஜோதி தரிசனம் காண்பதற்காக ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலுக்கு வந்தனர்.
நேற்று மாலை 6:30 மணிக்கு வல்லபை ஐயப்பன் கோயில் முன்புறமுள்ள அலங்கார பீடத்தில் மகரஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஜோதி தெரிந்தவுடன் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சரணகோஷம் முழங்கினர். பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார்.
சபரிமலை சென்று வந்த பக்தர்கள் மாலையை கழற்றி விரதம் முடித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.