/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அலகு குத்தி பூக்குழி இறங்கிய மலேசிய பெண்
/
அலகு குத்தி பூக்குழி இறங்கிய மலேசிய பெண்
ADDED : ஜூன் 26, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கோயில் திருவிழாவில் மலேசிய பெண் ஒருவர் அலகு குத்தி பூக்குழி இறங்கினார்.
திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை பால்குடம், காவடி எடுத்தல், பூக்குழி இறங்குதல் நடந்தது.
இவ்விழாவில் பங்கேற்க மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலம் கிளாங்செந்தோசா பகுதியை சேர்ந்த முன்னி 40, கணவருடன் சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வந்தார்.
விழாவில் முன்னி அலகு குத்தி, பூக்குழி இறங்கினார்.