/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் பழுதடைந்த சி.சி.டி.வி., கேமராக்களால் அவதி குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு

ADDED : பிப் 17, 2024 04:43 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் முக்கிய இடங்களில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை கண்காணிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரோட்டின் முக்கிய சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், உள்ளிட்ட பகுதிகளை போலீசார் ஆய்வு செய்து அப்பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கப்பட்டன. ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கண்மாய் விலக்கு பகுதி, பஸ் ஸ்டாப் முகப்பு கோயில் பகுதி, தேசிய நெடுஞ்சாலை இந்திரா நகர் பகுதி ஆகிய பகுதிகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டன.
இதனால், விபத்து வாகனங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எளிதாக கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ். மங்கலத்தில் முக்கிய ரோட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்கள் சில பழுதடைந்துள்ளதால் குற்றச் செயல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த கேமராக்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.