/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய ரூ.40 லட்சம் கடல் அட்டை பறிமுதல் ஒருவர் கைது

ADDED : நவ 20, 2025 02:55 AM

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் மாடியில் பதப்படுத்தப்பட்டு உலர்த்தப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.
கீழக்கரை புது கிழக்குத்தெருவை சேர்ந்தவர் முகமது மீரா சாகிபு 52. இவர் பல மாதங்களாக சட்ட விரோதமாக சேகரிக்கப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த வைத்திருந்தார்.
இதையறிந்த தனிப்பிரிவு போலீசார் வனத்துறையினருடன் இணைந்து அவரது வீடு மற்றும் மாடிப்பகுதியை சோதனையிட்டனர்.
மாடியில் அரசால் தடை செய்யப்பட்ட 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 13 மூடைகளில் இருந்தன.
இதன் மதிப்பு ரூ.40 லட்சம். இந்த கடல் அட்டைகளை பெரிய அண்டாக்களில் அவித்து அவற்றை பதப்படுத்தி யாருக்கும் தெரியாமல் மாடியில் உலர வைத்து பாதுகாத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கீழக்கரை வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கடல் அட்டையை பறிமுதல் செய்து கீழக்கரை வனச்சரகத்தில் நேற்று மாலை ஒப்படைத்தனர்.
கட ல் அட்டை பதுக்கிய முகமது மீரா சாகிபுவை கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.