/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
ADDED : பிப் 06, 2024 11:55 PM
ஆர்.எஸ்.மங்கலம் : அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியைச் சேர்ந்தவர் பஸ் டிரைவர் துரைப்பாண்டி 53. இவர் ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் வழித்தடத்தில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 11:00 மணிக்கு பஸ் ஆர்.எஸ்.மங்கலம் பூவாணிபேட்டை அருகே சென்றது.
அப்போது ரோட்டில் சரக்கு வாகனம் நின்றதால் பஸ் டிரைவர் சரக்கு வாகனத்திற்கு வழி விடும் வகையில் எதிரே நின்ற டூவீலர் ஓட்டுநரை சிறிது தள்ளி செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் பஸ் டிரைவருக்கும் டூவீலர் ஓட்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஆர்.எஸ். மங்கலம் பஸ் ஸ்டாண்ட் வந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த டூவீலர் ஓட்டுநர் பஸ் டிரைவரை கன்னத்தில் அறைந்தார்.
பஸ் டிரைவர் துரைப்பாண்டி புகாரில், சிவகங்கை மாவட்டம் சிறுவாளூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் 38, என்பவரை ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., விஷ்ணுவர்தன் கைது செய்தார்.

