ADDED : ஏப் 03, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ராம் நகரை சேர்ந்த பாபு 37. இவரது மனைவி அப்சரா பேகம் 36. திருமணமாகி 12 ஆண்டுகளாகிறது. இரு குழந்தைகள் உள்ளனர். பட்டணம்காத்தான் ஹவுசிங் போர்டு குடியிருப்பை சேர்ந்த அஜித்குமார் மார்ச் 31 இரவு 11:15 மணிக்கு அப்சரா பேகத்தை குயவன்குடி சுப்பையா கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.
இதையறிந்த பாபு, குயவங்குடி சுப்பையா கோயிலுக்கு சென்ற போது அப்சரா பேகமும் அஜித்தும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டார். ஆத்திரமடைந்த பாபு அவர்கள் இருவரையும் இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் அஜித்குமார், அப்சரா பேகம் காயமடைந்தனர். அஜித்குமார் புகாரில் பாபுவை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
