/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
/
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
ADDED : மே 25, 2025 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே காணிக்கூரில் வீடு புகுந்து 12 பவுன் நகையை திருடிய மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.
கமுதி அருகே காணிக்கூரை சேர்ந்த காளிச்சாமி மனைவி பேச்சியம்மாள் 55. வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளனர். கோவிலாங்குளம் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு நகையை திருடிய காணிக்கூரை சேர்ந்த செந்துார்பாண்டியன் மகன் மணிமாறன் 29, கைது செய்யப்பட்டு 12 பவுன் நகையை மீட்டனர்.