ADDED : மார் 05, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே அபிராமம் மணிநகரத்தில் சமூக நீதி பள்ளி மாணவிகள் விடுதி செயல்படுகிறது. இங்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் நுழைந்துள்ளார்.
இதையடுத்து மாணவிகள் சத்தம் கேட்டதில் விடுதி காப்பாளர் மாணவிகளை அறைக்குள் பூட்டி வைத்தார். பின்பு கம்பால் மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். அபிராமம் போலீசார் விசாரணையில் அபிராமம் நத்தம் பாவடி தெருவை சேர்ந்த செந்தில்குமார் 40, என தெரியவந்தது. விடுதிக்காப்பாளர் அல்லிராணி புகாரில் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
