/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை மிரட்டியவர் கைது
/
மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை மிரட்டியவர் கைது
மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை மிரட்டியவர் கைது
மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை மிரட்டியவர் கைது
ADDED : ஜன 19, 2025 04:51 AM
தொண்டி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்து டாக்டரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். தொண்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரவின்குமார். நேற்று காலை வழக்கம் போல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட தொண்டி ஓடாவி தெரு பசீர்முகமது 38, அங்கு வந்தார்.
அவரை பரிசோதித்துக் கொண்டிருந்த போது ஒரே அறையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எப்படி ஊசி போடலாம் என்று சத்தம் போட்டார். இதில் டாக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பசீர்முகமது டாக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து தரக்குறைவாக பேசி மிரட்டினார். பிரவின்குமார் புகாரில் பசீர் முகமதுவை தொண்டி எஸ்.ஐ., விஷ்ணு கைது செய்தார்.