/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது
/
சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது
சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது
சாயல்குடி அருகே 3.5 டன் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கியவர் கைது
ADDED : டிச 13, 2024 02:57 AM

சாயல்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூரில் வீட்டில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபரை மரைன் போலீசார் கைது செய்தனர்.
வாலிநோக்கம் மரைன் எஸ்.ஐ., பெருமாள் மற்றும் போலீசார் நரிப்பையூரில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருந்த தகவல் கிடைத்தது. அங்கு சோதனயிட்டதில் தலா 50 கிலோ கொண்ட 70 மூடைகளில் 3500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில் அரிசி மூடைகளை ஓரிவயல் சண்முகம் மகன் சந்தோஷ்குமார் 20, கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் குடிமைப் பொருள் பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
வீட்டில் இருந்த 3500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து கடலாடி நுகர் பொருள் வாணிப கழக கோடவுனில் ஒப்படைத்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவில் சாயல்குடி மற்றும் கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.