/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் காதலியின் போட்டோக்களை பரப்பியவர் கைது
/
முன்னாள் காதலியின் போட்டோக்களை பரப்பியவர் கைது
ADDED : செப் 17, 2025 03:56 AM

பெரியபட்டினம்,:ராமநாதபுரம் பெரியபட்டினம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் யாசர் அராபத் 30. கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் சில ஆண்டுகளாக காதலித்தனர். அப்போது அந்தப் பெண் தனது அந்தரங்க போட்டோக்களை யாசர் அராபத்திற்கு அனுப்பி உள்ளார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணமும் முடிந்துவிட்டதுஉ
இந்நிலையில் யாசர் அராபத் அவரின் நண்பரான துபாயில் பணிபுரியும் பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக்அலி 32, என்பவரிடம் தனது கடந்த கால காதல் குறித்து பேசியுள்ளார். அப்போது காதலியின் அந்தரங்க போட்டோக்களை இருவருமாக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
யாசர் அராபத்தை திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கைது செய்தார்.
வெளிநாட்டில் உள்ள ஆஷிக் அலியை வரவழைத்து கைது செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது.