/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆந்திர பக்தரிடம் நகை திருடியவர் கைது
/
ஆந்திர பக்தரிடம் நகை திருடியவர் கைது
ADDED : ஆக 14, 2025 02:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:ஆந்திரா திருப்பதியை சேர்ந்த அனுதீப் ரெட்டி 36, குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 24 வந்தார். இரவு ஓட்டலில் சாப்பிட காரை சீதா தீர்த்தம் அருகே நிறுத்தி சென்றார்.
அப்போது கார் கண்ணாடியை உடைத்து காரினுள் பேக்கில் இருந்த 5 பவுன் தங்க மோதிரம் 4, இரண்டு வைர தோடுகள் திருடப்பட்டன.
ராமேஸ்வரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். எஸ்.பி., சந்தீஷ் உத்தரவுப்படி கிரைம் போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.
நகையை திருடியவர் திருச்சி அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமன் மகன் பாஸ்கர் 55, என்பது தெரிந்தது. அவரை போலீசார் பிடித்து திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.