/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது
/
பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது
பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது
பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப் திருடியவர் கைது
ADDED : டிச 13, 2024 04:14 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் கல்லுாரி மாணவியிடம் லேப்டாப், அலைபேசியை திருடிய மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரைச் சேர்ந்த மணிகண்டன் 46, கைது செய்யப்பட்டார்.
ராமேஸ்வரம் பேக்கரும்பை சேர்ந்தவர் காளிராஜ். மகள் மதிநிலா மதுரை கல்லுாரியில் படிக்கிறார். டிச.9ல் திருப்பூர் சென்ற அரசு பஸ்சில் மதுரை சென்றார். ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்ற போது மாணவி பாத்ரூம் சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது பையில் இருந்த லேப்டாப், அலைபேசியை மர்ம நபர் திருடிவிட்டார். இதுகுறித்து கேணிக்கரை எஸ்.ஐ., தங்கஈஸ்வரன் விசாரித்தார். இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் மணிகண்டன் 46, பஸ்சில் திருடியது தெரிய வந்தது. லேப்டாப், அலைபேசியை பறிமுதல் செய்து மணிகண்டனை கைது செய்தனர்.