ADDED : ஏப் 04, 2026 04:24 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம் -: ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதி லிப்டில் தவறி விழுந்த ஊழியர் உயிரிழந்தார்.
ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக பணி செய்தவர் அபுஹனிபா 55. இவர் நேற்று விடுதி 3வது மாடியில் தங்கி இருந்த பக்தர்களுடன் லிப்டில் தரை தளத்திற்கு வந்துள்ளார். அப்போது லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. இதன் பின் பிற ஊழியர்கள் உதவியுடன் லிப்ட்டில் தவித்த பக்தர்களை மாற்று வழியில் மீட்டார்.
அதன் பின் அபுஹனிபாவும் இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
