ADDED : ஏப் 14, 2026 10:10 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: தொண்டி அருகே சோழியக்குடியை சேர்ந்தவர் முனியசாமி 62. நேற்று காலை இவர் கரைவலை மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் நடந்து சென்று 50 மீட்டர் தொலைவில் வலை வீசிக் கொண்டிருந்த போது முனியசாமிக்கு எதிர்பாராத விதமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் நிலைதடுமாறிய அவர் மயங்கி விழுந்து மூச்சு திணறி இறந்தார்.
மற்ற மீனவர்கள் முனியசாமி உடலை மீட்டனர். தொண்டி மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
