/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
/
திருவாடானை பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
ADDED : ஜூலை 28, 2025 05:33 AM
திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
மாணவர்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில் இந்த கல்வியாண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. திருவாடானை வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என 112 அரசு பள்ளிகள் உள்ளன.
இந்த ஆண்டு முதல் கூட்டமாக நடந்த இக்கூட்டத்தில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்து, கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, மாணவர்களின் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர்.