/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உத்தரவு

ADDED : நவ 08, 2024 04:11 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து உரிய காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராஜ் உத்தர விட்டுள்ளார்.
ராமநாதபுரம் நகரில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சென்னையில் இருந்து வந்த நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ் ஆய்வு செய்தார்.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நகராட்சி கூடுதல் நிர்வாக இயக்குநர் சேக் அப்துல் ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.
கழுகூருணியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு மத்திய நிதிக்குழு திட்டத்தில் நடக்கும் பணிகளையும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். நகரில் ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உரிய காலத்திற்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.
நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் முஜ்பூர் ரகுமான், ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் கார்மேகம், கமிஷனர் அஜிதா பர்வின், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.