/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை கோயிலில் ஏப்.30ல் மண்டல பூஜை
/
உத்தரகோசமங்கை கோயிலில் ஏப்.30ல் மண்டல பூஜை
ADDED : ஏப் 24, 2025 06:47 AM
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம்- உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடந்தது. திருவிழா வருவதால் முன்கூட்டியே ஏப்.,30ல் மண்டல பூஜை நடக்கிறது.
கும்பாபிேஷகத்திற்குப்பின் தினமும் மங்களநாத சுவாமி சன்னதி அருகே மண்டல பூஜையை முன்னிட்டு கோயில் சிவாச்சாரியார்களால் புனித நீரால் பூஜிக்கப்பட்டு மங்களேஸ்வரி அம்மன் சமேத மங்களநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஏப்.,29 மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை துவக்க பூஜைகளும் மறுநாள் (ஏப்., 30) முழுவதும் மண்டல பூஜையும் நடக்க உள்ளது.
மங்களநாத சுவாமி வடக்கு பிரகார சன்னதியில் மண்டல பூஜை ஹோம வேள்வியுடன்துவங்கும்.
சித்திரை பெருவிழா நடப்பதை முன்னிட்டு அரை மண்டல பூஜையாக நிறைவு பெற உள்ளது. விரைவில் சித்திரை பெருவிழாவிற்கான கொடியேற்றம், பத்து நாள் நிகழ்ச்சிகளும் மற்றும் தேரோட்டம் நடக்க உள்ளது.