
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி அருகேயுள்ள காட்டுப்பரமக்குடி கிராமத்தில் தாழை மதலை கருப்பண்ணசுவாமி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது.
கோயிலில் ஜூலை 2 மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை விழாவையொட்டி, கருப்பண்ணசுவாமி, சோனை கருப்பண், ராக்காச்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.

