/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் மண்டல பூஜை இன்றும் நடக்கிறது
/
உத்தரகோசமங்கையில் மண்டல பூஜை இன்றும் நடக்கிறது
ADDED : ஏப் 30, 2025 06:16 AM
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஏப்., 4ல் கும்பாபிஷேகம் நடந்தது.
சித்திரை பெருவிழா வருவதால் மண்டல பூஜை முன்கூட்டியே நேற்று மாலை துவங்கி இன்று வரை நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்கு பிறகு தினமும் மங்களநாதர் சுவாமி சன்னதி அருகே மண்டல பூஜையை முன்னிட்டு தொடர்ந்து புனித நீரால் பூஜிக்கப்பட்டு மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் கடந்த நாட்களில் நடந்தன.
மங்களநாதர் பிரகார சன்னதி அருகே அலங்கரிக்கப்பட்ட உற்ஸவ மூர்த்திகளின் முன்பாக யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.
நேற்று மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை பூஜைகள் நடந்தன. ஏராளமான ஸ்தானிக குருக்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மண்டல பூஜை நடக்கிறது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்டவரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.