நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: வாலாந்தரவை ஊராட்சி வழுதுார் உடைச்சியார் வலசை காடுகன்னி அய்யனார் கோயிலில் ஏப்.,30 ல் கும்பாபிேஷகம் நடந்தது.
நேற்று மண்டல பூஜை விழாவில் நோய்கள் பரவாமல் இருக்கவும், விவசாயம் செழிக்க நல்ல மழை பொழிய வேண்டி யாகபூஜைகள் நடந்தது.
காடுகன்னி அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களான கருப்பண்ணசுவாமி, ராக்கச்சி அம்மன், நாகநாதர் தெய்வங்களுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தன. கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.