UPDATED : அக் 10, 2026 06:02 PM
ADDED : அக் 10, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி வழிவிட்ட அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 48 நாள் கழித்து மண்டல பூஜை விழா நடந்தது. கணபதி ஹோமம் துவங்கி யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி நடந்தது. பூரண, புஷ்கலா வழிவிட்ட அய்யனார், அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி பூஜை செய்தனர். பின் உலக நன்மை வேண்டியும், பருவ மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிவலிங்கம் வடிவில் வடிவமைக்கப்பட்ட 1008 சங்காபிஷேகம் பூஜை நடந்தது.
பால், மஞ்சள், சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
