/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அவதாண்டை வில்லாயுத மூர்த்தி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை
/
அவதாண்டை வில்லாயுத மூர்த்தி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை
அவதாண்டை வில்லாயுத மூர்த்தி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை
அவதாண்டை வில்லாயுத மூர்த்தி கோயிலில் மண்டலாபிஷேக பூஜை
ADDED : நவ 07, 2024 01:45 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே அவதாண்டை கிராமத்தில் உள்ள வில்லாயுத மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு செப்.16ல் கும்பாபிஷேகம் நடந்தது.
அதன் பின் 48 நாட்கள் நிறைவை முன்னிட்டு மண்டலாபிஷேக பூஜையில் மூலவர்கள் வில்லாயுத மூர்த்தி, விநாயகர், முருகன், அரியநாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
ஹோம வேள்விகள் நடந்தது. பூஜிக்கப்பட்ட குடங்களில் நிரப்பப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வில்லாயுத மூர்த்தி கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.