ADDED : பிப் 10, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழகத்தில் மாம்பழம் சீசன் மார்ச் ல் துவங்கி ஜூன் வரை இருக்கும். இந்நிலையில் சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் வாழப்பாடி மாம்பழம் பிப்., முதலே விற்பனைக்கு வந்துள்ளன.
சாலையோர கடைகளில் கிலோ ரூ.260க்கு விற்கிறது. தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக மாம்பழம் விளைச்சல் முன்னதாகவே துவங்கியுள்ளதால் சந்தையில் மாம்பழம் வரத் துவங்கியுள்ளது. வரும் வாரங்களில் மாம்பழம் வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறினர்.
