/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆருத்ரா தரிசன விழாவில் மாணிக்கவாசகர் உற்ஸவம்
/
ஆருத்ரா தரிசன விழாவில் மாணிக்கவாசகர் உற்ஸவம்
ADDED : ஜன 05, 2025 11:56 PM
உத்தரகோசமங்கை; ஆருத்ரா விழாவை முன்னிட்டு உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் உற்ஸவ நாட்கள் வரை மாணிக்கவாசகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள் பிரகார வீதியின் வழியாக மரகத நடராஜர் சன்னதிக்கு எழுந்தருளிகிறார்.
மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் வரக்கூடிய ஆருத்ரா தரிசன விழாவிற்காக உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் கும்பத்தில் புனித நீர் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்து, மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜையுடன் விழா தொடங்கியது.
ஆருத்ரா விழா உற்ஸவ நாட்கள் வரை மாணிக்கவாசகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உள்பிரகார வீதியின் வழியாக மரகத நடராஜர் சன்னதிக்கு தினமும் எழுந்தருளிகிறார்.
திருமறை, திருவம்பாவை, திருவாசகம் உள்ளிட்ட பாடல்கள் பாடப்படுகின்றன.
பின்னர் வழக்கம்போல் மதியம் 12:00 மணிக்கு ஸ்படிகம், மரகத லிங்க பூஜையும், இரவு 8:00 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கிறது.