/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடல் வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி
/
கடல் வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி
ADDED : பிப் 20, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: மத்திய அரசின் அறிவியல் அமைச்சக நிதி உதவியுடன் தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் தேசிய மீன்வள மரபணு மையம் சார்பில் உப்பூர் அருகே கடலுார் ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் கடல் வண்ண மீன் வளர்ப்பு குறித்து மீனவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலை கடல் அறிவியல் துறை பேராசிரியர் ரவிக்குமார் பங்கேற்று கடல் வாழ் உயிரினங்களின் தன்மைகள், வண்ண மீன்களின் வளர்ப்பு முறை குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு கடல் வண்ண மீன் பொரிப்பகத்தில கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் என மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

