ADDED : ஜூலை 12, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வரை ராணி மங்கம்மா சாலையில் உள்ள முக்கிய இடங்களில் மரைன் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
சமீப காலமாக இப்பகுதி கடற்கரை பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரையோர பகுதிகளை தேர்வு செய்து இலங்கைக்கு சட்ட விரோதமாக பொருட்களை கடத்துவது அதிகரித்து வருகிறது.
இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவும், கடத்தல்காரர்களை பிடிப்பதற்காகவும் மரைன் போலீசார் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

