ADDED : செப் 04, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேஷனில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி தலைமை வகித்தார். எஸ்.ஐ., அய்யனார் மற்றும் தொண்டி மரைன் போலீசார் கலந்து கொண்டனர். விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவம், கடல் சார்ந்த பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அந்நியர் நடமாட்டம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அவசர உதவி எண்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ்ஸ்டேஷனில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் குறித்து நேரடியாக காண்பித்து போலீசார் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
