/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்திரக்குடியில் ரோட்டில் நடக்கும் சந்தை: போக்குவரத்திற்கு இடையூறு
/
சத்திரக்குடியில் ரோட்டில் நடக்கும் சந்தை: போக்குவரத்திற்கு இடையூறு
சத்திரக்குடியில் ரோட்டில் நடக்கும் சந்தை: போக்குவரத்திற்கு இடையூறு
சத்திரக்குடியில் ரோட்டில் நடக்கும் சந்தை: போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : ஜன 22, 2025 09:09 AM

பரமக்குடி, : -பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சத்திரக்குடி ரோட்டோரம் சந்தை நடப்பதால் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கும் போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி இரு வழிச்சாலை செல்கிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு சத்திரக்குடியில் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதுடன், நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சத்திரக்குடியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் சந்தை கூடுகிறது.
சத்திரக்குடியை மையமாக வைத்து பல நுாறு கிராமங்கள் உள்ளன.இதனால் ஒவ்வொரு வாரமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தொடர்ந்து சந்தைக்கு தனி இடம் இருந்தாலும் இருவழிச் சாலை இருபுறங்களிலும் கடைகளை விரிக்கும்படி உள்ளது.
சத்திரக்குடி பஸ்ஸ்டாப் பகுதியாக இருப்பதால் தொடர்ந்து வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் உட்பட பொருட்கள் வாங்க வருவோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சந்தையை முறைப்படுத்துவதுடன் சத்திரக்குடியில் தனியாக இடம் ஒதுக்கி புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.