/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் அனுமதி பெறாமல் கட்டிய சந்தை, வணிக வளாகம்
/
பரமக்குடியில் அனுமதி பெறாமல் கட்டிய சந்தை, வணிக வளாகம்
பரமக்குடியில் அனுமதி பெறாமல் கட்டிய சந்தை, வணிக வளாகம்
பரமக்குடியில் அனுமதி பெறாமல் கட்டிய சந்தை, வணிக வளாகம்
ADDED : டிச 12, 2025 05:29 AM

ரோட்டிற்கு வந்த கடைகள்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி வாரச்சந்தை, வணிக வளாக கட்டடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட நிலையில் திறக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராததால் ரோட்டில் கடைகள் வரிசை கட்டி வியாபாரம் நடக்கிறது.
பரமக்குடி நகராட்சியில் 2023--24 ம் ஆண்டு கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 3.25 ஏக்கரில் ரூ.13.50 கோடியில் வாரச்சந்தை வளாகம் கட்டப்பட்டது.
இங்கு 240 காய்கறி கடைகள், 120 கருவாட்டு கடைகள் என 360 கடைகள் பிரம்மாண்ட இரும்பு கூரையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கால்நடை சந்தை, 36 இரண்டடுக்கு கான்கிரீட் கடைகள் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் நிறைவடைந்து 2025 அக்.,ல் ராமநாதபுரம் வந்த முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்தார்.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நகர் ஊரமைப்பு துறையின் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மணிகண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
தீயணைப்பு, சுகாதாரம், நகராட்சி ஊரமைப்பு அலுவலர் ஆகிய எவரிடமும் தடையின்மை சான்று பெறப்படவில்லை. அவசர வழி, பாதுகாப்பு அம்சங்கள், கழிவுநீர் வெளியேற்றம், மழை நீர் வடிகால் என விதிமுறை பின்பற்றப்படாமல் உள்ளது.
இதன் அடிப்படையில் வாரச்சந்தை தற்போது வரை செயல்பாடின்றி ரோட்டோரம் நடக்கிறது. மேலும் நேற்று முன்தினம் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு ஏலம் நடத்த அறிவிப்பு வெளியாகியது. தொடர்ந்து பரமக்குடியை சேர்ந்த தினேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து கட்டடம் கட்டுமானத்திற்கு முன்னதாக உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும். இதனை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. மேலும் அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது போலும், என அதிருப்தியை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மத்திய, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுமானத்திற்கும் முறையான அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து ஏலம் விடவும் தடை விதிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை 2026 ஜன.,13க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக வாரச்சந்தை போர்டிங் ரோடு மற்றும் ராமநாதபுரம் நெடுஞ்சாலை ஓரங்களில் செயல்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இருப்பினும் வழக்கம் போல் நகராட்சி மூலம் வசூல் செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்த நிலையில், பாதுகாப்பான இடத்தில் சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

