/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை அரசு பள்ளிகளுக்கு ரூ.4.33 கோடி மார்ட்டின் சாரிட்டபுள் அறக்கட்டளை ஒதுக்கீடு
/
திருவாடானை அரசு பள்ளிகளுக்கு ரூ.4.33 கோடி மார்ட்டின் சாரிட்டபுள் அறக்கட்டளை ஒதுக்கீடு
திருவாடானை அரசு பள்ளிகளுக்கு ரூ.4.33 கோடி மார்ட்டின் சாரிட்டபுள் அறக்கட்டளை ஒதுக்கீடு
திருவாடானை அரசு பள்ளிகளுக்கு ரூ.4.33 கோடி மார்ட்டின் சாரிட்டபுள் அறக்கட்டளை ஒதுக்கீடு
ADDED : டிச 12, 2025 05:34 AM

திருவாடானை: திருவாடானை அரசு பள்ளிகளுக்கு மார்ட்டின் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் ரூ. 4.33 கோடியில் வகுப்பறை கட்டடம் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருவாடானை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கூடுதல் வகுப்பறைகள் கட்டவும், மாணவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்கும் நோக்கில் மார்ட்டின் சாரிட்டபுள் அறக்கட்டளை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துள்ளது.
திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2 கோடியில் எட்டு வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு ரூ.2.25 கோடியில் எட்டு வகுப்பறை கட்டடங்கள், 16 கழிப்பறைகள், கலையரங்கம் மற்றும் நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் இரு தேர்களின் மராமத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது.
திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ.16 லட்சத்தில் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மார்ட்டின் சாரிடபிள் அறக்கட்டளை இயக்குநர் லீமாரோஸ், மார்ட்டின் கூறியதாவது:
கல்வி ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. மார்ட்டின் அறக்கட்டளை ஏழை மக்களை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது. குறிப்பாக 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு' பள்ளி திட்டத்தில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க அளவில் நலத்திட்ட பணிகள் நடந்துள்ளது.
திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்தி இப்பகுதி மாணவர்கள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றனர்.

