ADDED : அக் 28, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மருதுபாண்டியர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கிராம பெண்கள் 108 பால்குடங்கள் எடுத்து அபிேஷகம் செய்தனர்.
மருதுபாண்டியர்கள் சிலைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் தலைவர் தரணி முருகேசன், மாவட்ட அகமுடையார் சங்க செயலாளர் பாபு, பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மலர்துாவி மரியாதை செலுத்தினார். உடன் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் பட்டணம்காத்தான் பாரதிநகரில் மருதுபாண்டியர் புகைப்படங்களுக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் பலர்பங்கேற்றனர்.------

