/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்க்சிஸ்ட் கம்யூ., 24வது மாவட்ட மாநாடு ஊர்வலம்
/
மார்க்சிஸ்ட் கம்யூ., 24வது மாவட்ட மாநாடு ஊர்வலம்
ADDED : டிச 22, 2024 08:32 AM

பரமக்குடி : பரமக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூ., 24வது மாவட்ட மாநாட்டையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மாவட்ட செயலாளர் காசிநாததுரை தலைமை வகித்தார். வட்டார செயலாளர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
சந்தை கடை முன்பு துவங்கிய ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட், ஆர்ச், ஐந்து முனை, பஜார் வழியாக காந்தி சிலை பகுதியை அடைந்தது.
காந்தி சிலை முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், பாலபாரதி, பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பேசினர்.
மாவட்ட நிர்வாகிகள் மயில்வாகனன், ராஜா, அய்யம்மாள் உள்ளிட்டோர் பேசினர். நகர் செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.
தொடர்ந்து டிச.21, 22 ஆகிய 2 நாட்கள் பரமக்குடி அருகே தனியார் மஹாலில் மாவட்ட மாநாடு நடக்க உள்ள நிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.