/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 29, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் அரண்மனை அருகே சூரிய மின்சக்தி அளிப்பதில் ஊழலில் சிக்கியுள்ள அதானிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர்.
இதில் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல ஆயிரம் கோடி லஞ்சம் ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.